கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெலவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்காவின் சோபா மற்றும் அக்ஸா ஒப்பந்தங்கள் தொடர்பில் கவனத்தில் எடுப்பதற்கு தயார் எனத் தெரிவித்திருந்தார்.  

எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்த விமல் வீரவங்ச கூறும் போது, அந்த ஒப்பந்தங்களைக் கவனத்தில் எடுப்பதற்குக் கூட தகுதியற்றது என்றும், எவராவது அவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாததாலாகும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்நாட்டிற்கு பாதிப்பானது என்றும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


பிந்திய செய்தி