இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு இலகுவான வெற்றி கிடைக்கும் என பிரபல

அரசியல் விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் எதிர்வு கூறியுள்ளார்.  “ராவய” செய்திப் பத்திரிகையின் ஆலோசகரான விக்டர் ஐவன், இலங்கையில் நிலவும் சமூக நிலைகளை விரிவாக ஆராய்ந்ததன் பின்னரே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

“சாதாரணமாக ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சஜித்தை ஒரு மீ்ட்பாளராகவே பார்க்கின்றனர். இது அரசியலில், சமூகத்தில், முக்கியமாக வாக்குகளின் பெரும் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது, உண்மையிலேயே சஜித்துக்கும், கோத்தாவுக்கும் இடையிலான போட்டியில் சஜித் மிக இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொள்வார்.

அந்த ஒடுக்கப்பட்டவர்கள் எனும் போது சஜித் மீது தாக்கம் செலுத்துவது சிங்களவர்கள் தொடர்பில் மாத்திரமல்ல.  ஒடுக்கப்பட்டவர்கள் எனும் போது  அது வடக்கு கிழக்கிலும் தாக்கத்தைச் செலுத்தும், பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் தாக்கத்தைச் செலுத்தும். காரணம் அவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவரினதும் உத்வேகத்திற்குரிய தலைவர்தான சஜித். அது கோத்தாபயவுக்கு இல்லை.

கோட்டாவிடம் இருப்பது  தனியான வாக்குகளாகும். அப்படியாயின்  சஜித்திற்கு இருக்கும் இலாபம்தான் ஐ.தே.கட்சியின் வாக்குகளுக்குப் புறம்பாக மற்றையவர்களின் வாக்குகள் பெருமளவில்  பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகும்....”


பிந்திய செய்தி